உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தோனியின் விருப்பம் என்ன: பத்ரிநாத் கணிப்பு

தோனியின் விருப்பம் என்ன: பத்ரிநாத் கணிப்பு

புதுடில்லி: ''சென்னை அணியில் 'இம்பாக்ட்' வீரராக களமிறங்க தோனிக்கு விருப்பமில்லை,'' என, முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.முன்னாள் இந்திய கேப்டன் தோனி 45, கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார். இவரது தலைமையில் சென்னை அணி 5 முறை கோப்பை வென்றது. இந்த ஆண்டு காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, அடுத்த சீசனில் (2027) விளையாடுவாரா அல்லது 'இம்பாக்ட்' வீரராக களமிறங்குவாரா என்ற குழப்பம் நீடிக்கிறது.இதுகுறித்து முன்னாள் சென்னை அணி வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறுகையில், ''அடுத்த ஆண்டு நடக்கவுள்ள கிரிக்கெட் லீக் தொடரில் முழுநேர விக்கெட் கீப்பராக விளையாட தோனி விரும்புகிறார். 'இம்பாக்ட்' வீரராக களமிறங்க அவருக்கு விருப்பமில்லை. என்னை பொறுத்தவரை அவர், 'இம்பாக்ட்' வீரராக வந்தால் சென்னை அணிக்கு நல்லது. ஏனெனில் அவரது உடல் நீண்ட நேரம் 'கீப்பிங்' செய்ய ஒத்துழைக்காது. இதனை, சென்னை அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் கூறியிருந்தார். அவர், 16 ஓவர்களுக்கு பின் தான் 'பேட்டிங்' செய்ய களமிறங்குவார். நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடப் போவதில்லை என்பதால் 'இம்பாக்ட்' வீரர் விதி அவருக்கு பொருத்தமாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி