உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தப் புன்னகை என்ன விலை: கோலி இதயம் சொன்ன விலை

இந்தப் புன்னகை என்ன விலை: கோலி இதயம் சொன்ன விலை

புதுடில்லி: ''தவான் உடன் விளையாடிய காலங்கள் இனிமையானவை. அவரது புன்னகையை 'மிஸ்' செய்வோம்,''என விராத் கோலி தெரிவித்தார்.இந்திய அணியின் துவக்க பேட்டர் ஷிகர் தவான் 38. தனது 13 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு நேற்று முன் தினம் 'குட்-பை' சொன்னார். 2013-19 காலக்கட்டத்தில் துவக்க ஜோடியாக ரோகித் சர்மா-தவான் அசத்தினர். தவான், ரோகித், கோலி சேர்ந்து 'டாப்-ஆர்டரில்' மிரட்டினர். தவான் ஓய்வு பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் கூறியது.ரோகித் சர்மா: 'டிரஸ்சிங் ரூம்' டூ கிரிக்கெட் களம் வரை தவானுடன் செலவிட்ட நேரம் மறக்க முடியாதது. துவக்க வீரராக வந்த இவர், மறுமுனையில் ஆடிய எனது பணியை சுலபமாக்கினார்.கோலி: இந்தியாவின் நம்பத்தகுந்த துவக்க பேட்டராக விளங்கினார் தவான். இவரது விளையாட்டு உணர்வு, துணிச்சலான ஆட்டம், கிரிக்கெட் மீதான மோகம் என பல விஷயங்களை நினைத்து பார்க்கலாம். இவரது தனிச்சிறப்பான புன்னகையை 'மிஸ்' செய்வோம். மறக்க முடியாத நினைவுகளை தந்ததற்கு நன்றி. உங்களது வாழ்வின் அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.சூர்யகுமார்: உங்களது கிரிக்கெட் வாழ்க்கை அழகானது. 'மிஸ்டர். ஐ.சி.சி.,' என போற்றும் அளவுக்கு சிறப்பானது. யூசுப் பதான்: களத்தில் நீங்கள் நிற்கும் 'ஸ்டைல்', அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடும் திறனை மறக்க முடியாது.ரவி சாஸ்திரி: இந்திய அணியின் பயிற்சியாளராக 7 ஆண்டுகள் இருந்த போது, தவானின் திறமையை கண்டு ரசித்தேன். ஐ.சி.சி., தொடர்களில் அசைக்க முடியாத வீரராக ஜொலித்தார். இளமையாக தான் இருக்கிறார். கிரிக்கெட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் இவரது பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை