உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / யாரு இந்திரன்...யாரு சந்திரன்: ஜடேஜா கலகல

யாரு இந்திரன்...யாரு சந்திரன்: ஜடேஜா கலகல

சென்னை: ''அஷ்வின் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் 37. தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளரான இவர், சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் கைப்பற்றினார். தவிர 100வது டெஸ்டில் விளையாடினார். இதனை கவுரவிக்கும் விதமாக தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் அஷ்வினுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முன்னாள் ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன், முன்னாள் பி.சி.சி.ஐ., செயலர் காசி விஸ்வநாதன், முன்னாள் இந்திய கேப்டன்களான ஸ்ரீகாந்த், கும்ளே உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடும்பத்தினருடன் கலந்து கொண்ட அஷ்வினுக்கு நினைவு பரிசு, ரூ. ஒரு கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ''டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட், 100 போட்டி என்ற மைல்கல்லை எட்டிய அஷ்வினுக்கு வாழ்த்துகள். இது எளிதானதல்ல. டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள், 'டி-20'யிலும் முத்திரை பதித்துள்ளார். எப்போது ஓய்வு பெறுவார் எனத் தெரியவில்லை. இவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்,'' என்றார்.ஸ்ரீகாந்த் கூறுகையில், ''டெஸ்ட் வரலாற்றில் 500 விக்கெட், 100 போட்டி என அஷ்வின் சாதித்ததற்கு அவரது தன்னம்பிக்கை முக்கிய காரணம். இவரது வளர்ச்சியில் சீனிவாசனுக்கும் முக்கிய பங்கு உண்டு. வாழ்த்துகள் அஷ்வின்,'' என்றார். சக வீரர் ரவிந்திர ஜடேஜா 'வீடியோ' செய்தி மூலம் வாழ்த்தினார். நடிகர் ரஜினியின் தில்லுமுல்லு படத்தின் இரட்டை கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தி ஜாலியாக பேசினார். இவர் கூறுகையில்,''டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய உங்களுக்கு வாழ்த்துகள். உங்களது மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நானும் ஜாம்பவான வீரராக முடியும். மீசை வச்சவன் ரவி இந்திரன், மீசை வைக்காதவன் ரவி சந்திரன். நல்லா இருக்கு அஷ்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி