உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சிட்னி டெஸ்டில் ரெஸ்ட் ஏன்: ரோகித் சர்மா விளக்கம்

சிட்னி டெஸ்டில் ரெஸ்ட் ஏன்: ரோகித் சர்மா விளக்கம்

சிட்னி: ''சிட்னி டெஸ்டில் மட்டும் விலகினேன். ஓய்வு பெறவில்லை'', என ரோகித் சர்மா தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தடுமாறினார். 5 இன்னிங்சில் 31 ரன் (சராசரி 6.20) எடுத்தார். 2024ல் 26 இன்னிங்சில் 619 ரன் (சராசரி 24.76) தான் எடுத்தார். கேப்டனாகவும் சோபிக்கவில்லை. இதனால், சிட்னி டெஸ்டில், இந்திய கேப்டனாக பும்ரா களமிறங்கினார். மோசமான 'பார்ம்' காரணமாக ரோகித் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இவருக்கு பதில் சுப்மன் கில் வாய்ப்பு பெற்றார்.நேற்றைய ஆட்டத்தின் 'டிரிங்ஸ்' இடைவேளையின் போது மைதானத்திற்குள் வந்த ரோகித், கேப்டன் பும்ராவிடம் சிறிது நேரம் பேசினார். இருவரும் வெற்றிக்கான உத்திகள் பற்றி விவாதித்திருக்கலாம்.பின் ரோகித் கூறியது: என்னால் ரன் எடுக்க முடியவில்லை. நல்ல 'பார்மில்' இல்லை. இதனால் சிட்னி டெஸ்டில் இருந்து மட்டும் 'ரெஸ்ட்' எடுக்க முடிவு செய்தேன். இதை பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஏற்றுக் கொண்டனர். கிரிக்கெட்டை விட்டு எங்கும் செல்லவில்லை. ஓய்வு பெறவில்லை. மாற்றம் நிச்சயம்: எனது பேட்டிங் இப்போதைக்கு 'கிளிக்' ஆகவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியிலும் மாற்றம் ஏற்படும். எனது ஆட்டத்திலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்டு. ஒரு சிலர் எழுதுவதால், என் வாழ்க்கை மாறாது. என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. நான் இரு குழந்தைக்கு தந்தையான முதிர்ந்த மனிதன். எனது வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்க தேவையான அறிவு உள்ளது. கோப்பை முக்கியம்: அணியின் ஒட்டுமொத்த கவனமும் தற்போதைய டெஸ்ட் தொடரில் தான் உள்ளது. இந்திய அணி, 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பையை தக்க வைக்க வேண்டுமானால், சிட்னியில் கட்டாயம் வெல்ல வேண்டும். இதை மனதில் வைத்து தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அணியின் நலனே எங்களுக்கு முக்கியம். கேப்டனாக பும்ரா அசத்துகிறார். 2013ல் இவரை முதன்முதலில் சந்தித்தேன். தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பயணிக்கிறார். உலகத் தரம் வாய்ந்த பவுலராக உருவெடுத்துள்ளார்.இவ்வாறு ரோகித் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ