மேலும் செய்திகள்
அடக்க நினைத்த போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலை
23-Dec-2025
விசாகப்பட்டினம்: ''தேவைப்படும் பட்சத்தில் பவுலிங் செய்ய தயாராக இருக்கிறேன்,'' என, இந்திய வீராங்கனை ஷைபாலி வர்மா தெரிவித்தார்.இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் அசத்திய இந்திய துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா (69 ரன், 34 பந்து) ஆட்ட நாயகி விருது வென்றார். இதுவரை 92 சர்வதேச 'டி-20' போட்டியில், 2299 ரன் (சராசரி 26.73, 'ஸ்டிரைக்ரேட்' 132.58) குவித்துள்ளார். தவிர இவர், 10 விக்கெட் சாய்த்துள்ளார்.இதுகுறித்து ஷைபாலி வர்மா கூறியது: எனக்கு பந்துவீச மிகவும் பிடிக்கும். எங்கள் தலைமை பயிற்சியாளர் அன்மோல் மஜும்தார், 'பேட்டர்கள் அனைவரும் பந்துவீச தயாராக இருக்க வேண்டும். போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப வாய்ப்பு வழங்கப்படும்,' என தெரிவித்திருந்தார். இதனால் நாங்கள் பவுலிங் பயிற்சியில் ஈடுபடுகிறோம். ஸ்மிருதி, ஜெமிமா ஆகியோரும் சிறப்பாக பந்துவீசுகின்றனர். அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் எந்த நேரத்திலும் பந்துவீச 'ரெடி'யாக உள்ளோம். முதல் போட்டியில் நிறைய 'கேட்ச்' வாய்ப்புகளை வீணடித்தோம். தற்போது பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். இளம் வீராங்கனை வைஷ்ணவி, சிறப்பாக பந்துவீசுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் எங்களது செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.இவ்வாறு ஷைபாலி கூறினார்.
23-Dec-2025