உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / முதல் வெற்றி பெறுமா இந்தியா * இன்று நியூசி.,யுடன் பலப்பரீட்சை

முதல் வெற்றி பெறுமா இந்தியா * இன்று நியூசி.,யுடன் பலப்பரீட்சை

துபாய்: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பையில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.ஐ.சி.சி., சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இந்தியா இதுவரை 4 முறை (2009, 2010, 2018, 2023) அரையிறுதிக்கு சென்றது. 2020ல் பைனலுக்கு முன்னேறியது. மற்றபடி ஒரு முறை கூட கோப்பை வென்றது இல்லை. கடந்த 2018 முதல் இந்திய அணி கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத்திற்கு இது, கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும்.இதனால் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இத்தொடருக்காக, நெருக்கடியான நேரத்தில் எப்படி செயல்படுவது, முக்கிய போட்டிகளுக்கு மனதளவில் தயாராவது உட்பட பல்வேறு பயிற்சிகள் எடுத்துள்ளது.எனினும் போட்டி தினத்தில் எப்படி சிறப்பாக செயல்படுகிறோம், திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில் தான் வெற்றி உள்ளது. முதல் சவால்இன்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, வலிமையான நியூசிலாந்தை சந்திக்கிறது. அடுத்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை என வலுவான அணிகளை சந்திக்க வேண்டிய நிலையில், இன்றைய வெற்றி இந்தியாவுக்கு முக்கியம். இதனால், துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, இளம் வீராங்கனை ஷபாலி, ஜெமிமா, ரிச்சா உள்ளிட்டோர் பேட்டிங்கில் கைகொடுக்க வேண்டும். பவுலிங்கில் ரேணுகா, பூஜா, அருந்ததி, சுழலில் தீப்தி, ஸ்ரேயாங்கா, ராதா வெற்றி தேடித் தர வேண்டும். நியூசி., பலம்நியூசிலாந்து அணி அனுபவம், இளமை கலந்து பலமாக காணப்படுகிறது. கேப்டன் சோபி, ஆல் ரவுண்டர் சுஜீ, வேகப்பந்து வீச்சாளர் லியா, காஸ்பெரக்குடன் இளம் வீராங்கனை அமேலியா கெர் என பலரும் அணிக்கு கைகொடுக்க காத்திருக்கின்றனர்.யார் ஆதிக்கம்இந்தியா, நியூசிலாந்து பெண்கள் அணிகள் இதுவரை 13 'டி-20' ல் மோதின. இதில் இந்தியா 4ல் மட்டும் வென்றது. நியூசிலாந்து 9 ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.* இரு அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 1ல் தான் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை