மேலும் செய்திகள்
கால்பந்து: இந்தியா அபாரம் * மங்கோலியாவை வென்றது
25-Sep-2024
வியன்டின்: ஆசிய கோப்பை (20 வயது) கால்பந்தில் கடைசி வரை போராடிய இந்திய அணி, 0-1 என ஈரானிடம் தோற்றது.ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2025ல் சீனாவில் (பிப். 6-23, 20 வயதுக்குட்பட்ட) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 45 அணிகள் மோதுகின்றன.இந்திய அணி, 'ஜி' பிரிவில் ஈரான், மங்கோலியா, லாவோசுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் மங்கோலியாவை 4-1 என வென்றது. நேற்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வலிமையான ஈரானை சந்தித்தது.முதல் பாதியில் 25 வது நிமிடம் இந்திய வீரர் கிப்கென் அடித்த பந்து, ஈரான் கோல் போஸ்ட் மேலாகச் செல்ல, வாய்ப்பு நழுவியது.இரண்டாவது பாதியில், 60வது நிமிடத்தில் இந்தியாவின் கெல்வின் சிங், பந்தை கோரு சிங்கிற்கு 'பாஸ்' செய்தார். இதை கோலாக மாற்ற கிடைத்த எளிய வாய்ப்பை, கோரு சிங் வீணடித்தார்.போட்டியின் 88 வது நிமிடத்தில் ஈராவ் வீரர் யூசெப் மசரே, ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.வாய்ப்பு எப்படிதற்போது இரு வெற்றி பெற்ற ஈரான், 6 புள்ளியுடன் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்திய அணி (2 போட்டி, 3 புள்ளி), கடைசி போட்டியில், நாளை லாவோசை அதிக கோல் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். பின் மற்ற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுக்கு ஏற்ப, இந்தியாவின் தகுதி குறித்து தெரியவரும்.
25-Sep-2024