மேலும் செய்திகள்
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி அசத்தல்
11-Dec-2024
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி ஏமாற்றம்
07-Dec-2024
பெங்களூரு: பெங்களூரு, கோவா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி 2-2 என 'டிரா' ஆனது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, கோவா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய கோவா அணிக்கு 7வது நிமிடத்தில் சந்தேஷ் ஜிங்கன் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் கோவா அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய கோவா அணிக்கு 66வது நிமிடத்தில் சாஹில் தவோரா ஒரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தார். பெங்களூரு அணிக்கு ரியான் வில்லியம்ஸ் (71வது நிமிடம்), ஜார்ஜ் பெரேரா தியாஸ் (83வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் 2-2 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதுவரை விளையாடிய 12 போட்டியில், 7 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி என 24 புள்ளிகளுடன் பெங்களூரு அணி முதலிடத்துக்கு முன்னேறியது. கோவா அணி 19 புள்ளிகளுடன் (5 வெற்றி, 4 'டிரா', 2 தோல்வி) 4வது இடத்தில் உள்ளது.
11-Dec-2024
07-Dec-2024