உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: சென்னை ஏமாற்றம்

கால்பந்து: சென்னை ஏமாற்றம்

புவனேஸ்வர்: சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்டு-16' போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்தியாவில் ஐ.எஸ்.எல்., மற்றும் ஐ-லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதன் ஐந்தாவது சீசனில் 15 அணிகள் மோதுகின்றன. 'நாக் அவுட்' முறையிலான இந்த போட்டிகள் அனைத்தும் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கின்றன. இதன் 'ரவுண்டு-16' போட்டியில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி முடிவதற்கு சற்று முன், மும்பை வீரர் கேர்லிஸ் (43வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.இரண்டாவது பாதியிலும் மும்பை வீரர்கள் அசத்தினர். 64, 86 வது நிமிடங்களில் சாங்டே இரண்டு கோல் அடித்தார். போட்டியின் கடைசி நிமிடத்தில் பிபின் சிங் (90) ஒரு கோல் அடித்தார். முடிவில் மும்பை அணி 4-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.நேற்று நடந்த மற்றொரு போட்டியில் வட கிழக்கு யுனைடெட் அணி 6-0 என முகமதன் அணியை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி