கால்பந்து: இந்திய பெண்கள் அபாரம்
பிஷ்கெக்: ஆசிய கால்பந்து தகுதி போட்டியில் இந்திய பெண்கள் (17 வயது) அணி 2-1 என 'திரில்' வெற்றி பெற்றது.பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கால்பந்து 10வது சீசன், 2026ல் சீனாவில் (ஏப். 30-மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இந்திய அணி 'ஜி' பிரிவில் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, கிர்கிஸ்தானை சந்தித்தது.போட்டியின் 27 வது நிமிடம், இந்திய வீராங்கனை பியர்ல், முதல் கோல் அடித்தார். அடுத்த 6வது நிமிடம் கிர்கிஸ்தானின் அக்மாரல் ஒரு கோல் அடிக்க முதல் பாதி 1-1 என சமனில் முடிந்தது.இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் இந்திய அணி கேப்டன் ஜுலன் நாங்மய்தெம் (90+1), ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.