இந்தியா நம்பர்-63: உலக கால்பந்து தரவரிசையில்
சூரிச்: பெண்கள் கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 63வது இடம் பிடித்தது.பெண்கள் கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி 70வது இடத்தில் இருந்து 63வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் மங்கோலியா (13-0), திமோர்-லெஸ்தே (4-0), ஈராக் (5-0), தாய்லாந்து (2-1) அணிகளை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக தகுதிச் சுற்றின் மூலம் ஆசிய கோப்பைக்கான இடத்தை உறுதி செய்தது. இதன்மூலம் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டது இந்தியா. கடந்த 2013, டிசம்பரில் 49வது இடம் பிடித்தது இந்தியாவின் சிறந்த தரவரிசையாக உள்ளது.ஸ்பெயின் 'நம்பர்-1'சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த 'யூரோ' கோப்பை தொடரில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த நடப்பு உலக சாம்பியன் ஸ்பெயின் அணி, முதலிடத்துக்கு முன்னேறியது. அமெரிக்க அணி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து 2வது முறையாக 'யூரோ' கோப்பை வென்ற இங்கிலாந்து, 4வது இடத்துக்கு முன்னேறியது. சுவீடன் அணி 'நம்பர்-3' இடத்தை கைப்பற்றியது.