மேலும் செய்திகள்
உலக கோப்பை: ஜெர்மனி தகுதி
18-Nov-2025
ஈஸ்ட் பெங்கால் வெற்றி * பெண்கள் கால்பந்தில்...
17-Nov-2025
அந்த நாள் ஞாபகம்... * உலக விளையாட்டு செய்திகள்
11-Nov-2025
சென்னை: சென்னை கால்பந்து அணியில் விக்னேஷ் தட்சிணாமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதில் 2015, 2017-18 என இரு முறை கோப்பை வென்ற அணி சென்னை. கடந்த 2023-24 சீசனில், ஆறாவது இடம் பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. தற்போது அடுத்த சீசனுக்கான (2024-25) வீரர்கள் ஒப்பந்தம் நடந்து வருகிறது. இதுவரை 11 வீரர்கள் ஒப்பந்தம் ஆன நிலையில் நேற்று, இந்திய அணியின் 'லெப்ட் பேக்' வீரர் விக்னேஷ் தட்சிணாமூர்த்தி (பெங்களூரு), நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் இணைந்தார். 2018 தெற்காசிய சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடிய இந்திய அணியில் இடம் பெற்ற இவர், ஐ.எஸ்.எல்., தொடரில் மும்பை அணிக்காக 5 ஆண்டு விளையாடினார். பின் ஐதராபாத் அணியில் இணைந்தார். இதுவரை 17 ஐ.எஸ்.எல்., போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சென்னை பயிற்சியாளர் ஓவன் கோயல் கூறுகையில்,'' ஐ.எஸ்.எல்., தொடரில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் விக்னேஷ். இவர் சென்னை அணியில் இணைந்தது மகிழ்ச்சி. இவருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக காத்திருக்கிறோம்,'' என்றார்.
18-Nov-2025
17-Nov-2025
11-Nov-2025