உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கேரளாவை வீழ்த்தியது பஞ்சாப்: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்

கேரளாவை வீழ்த்தியது பஞ்சாப்: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்

கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய பஞ்சாப் அணி 2-1 என கேரளாவை வீழ்த்தியது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கேரளா, பஞ்சாப் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் (86வது நிமிடம்) பஞ்சாப் அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் லுாகா மஜ்சென் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) கேரளா அணியின் ஜீசஸ் ஜிமெனெஸ் ஒரு கோல் அடித்தார். அடுத்த மூன்றாவது நிமிடத்தில் (90+5வது) பஞ்சாப் வீரர் பிலிப் மிர்ஜ்ல்ஜாக் ஒரு கோல் அடித்தார். இதற்கு கேரளா அணியினரால் பதிலடி தர முடியவில்லை.ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ