மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
தோகா: ஆசிய ஜூனியர் பளுதுாக்குதலில் இந்தியாவின் கோயல் பார், நிலாம் தேவி வெள்ளி வென்றனர்.கத்தார் தலைநகர் தோகாவில், ஆசிய யூத், ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. யூத் பெண்கள் 55 கிலோ பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் கோயல் பார், ஒட்டுமொத்தமாக 182 கிலோ ('ஸ்னாட்ச்' 79, 'கிளீன் அண்ட் ஜெர்க்' 103 கிலோ) பளுதுாக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.ஜூனியர் பெண்கள் 55 கிலோ பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் நிலாம் தேவி, ஒட்டுமொத்தமாக 190 கிலோ ('ஸ்னாட்ச்' 86, 'கிளீன் அண்ட் ஜெர்க்' 104 கிலோ) பளுதுாக்கி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.இதுவரை இந்தியாவுக்கு இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என, 6 பதக்கம் கிடைத்துள்ளன. ஏற்கனவே ஜோஷ்னா சபர் (யூத் 40 கிலோ), பாயல் (யூத் 45 கிலோ) தலா ஒரு தங்கம், பாயல் (ஜூனியர் 45 கிலோ), பாபுலால் (யூத் 49 கிலோ) தலா ஒரு வெண்கலம் வென்றிருந்தனர்.
03-Dec-2024