| ADDED : ஏப் 27, 2024 10:49 PM
ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில் ஜோதி 'ஹாட்ரிக்' தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உலக கோப்பை வில்வித்தை தொடர் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்கிறது. நேற்று காம்பவுண்டு பிரிவு போட்டிகள் நடந்தன. பெண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் ஜோதி, அதித்தி, பர்னீத் கவுர் கூட்டணி, இத்தாலியை சந்தித்தது. இதில் இந்தியா 236-225 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியதுஆண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, பிரியான்ஷ், பிரதமேஷ் கூட்டணி, நெதர்லாந்து அணியை 238-231 என்ற கணக்கில் சாய்த்து, இரண்டாவது தங்கம் வென்றது. கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் ஜோதி, அபிஷேக் ஜோடி, 158-157 என எஸ்தோனியாவின் ராபின், லிசெல் ஜோடியை வீழ்த்தி, தங்கம் வென்றது.மீண்டும் ஜோதிபெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பைனலில் ஜோதி, மெக்சிகோவின் ஆன்ட்ரியா மோதினர். ஸ்கோர் 146-146 என சமன் ஆனது. பின் 'ஷூட் ஆப்' முறையில் வெற்றி பெற்ற ஜோதி, இத்தொடரில் 'ஹாட்ரிக்' தங்கம் கைப்பற்றினார். ஆண்கள் தனிநபர் காம்பவுண்டு பைனலில் இந்திய வீரர் பிரியான்ஷ் 147-150 என ஆஸ்திரியாவின் வியனரிடம் வீழ்ந்து, வெள்ளி வென்றார். இந்தியா இதுவரை 4 தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ளது.