உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை * ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் விறுவிறு

இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை * ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் விறுவிறு

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.நடப்பு சாம்பியன் இந்தியாவை பொறுத்தவரையில், சீனா (3-0), ஜப்பான் (5-1), மலேசியா (8-1), தென் கொரியா (3-1) என பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. 12 புள்ளியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரிஸ் ஒலிம்பிக் போல தனது சிறப்பான 'பார்மை' தொடர்கிறார். இதுவரை 3 கோல் அடித்துள்ளார். தவிர ராஜ்குமார் பால், இளம் வீரர் அராய்ஜீத் சிங், உத்தம் சிங், சுக்ஜீத் சிங் என பலரும் தலா 3 கோல் அடித்துள்ளனர்.கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (4-0), சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் (10-2) இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. தவிர 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, 4-3 என பாகிஸ்தானை சாய்த்து வெண்கலம் வசப்படுத்தியது.இந்த அனுபவம் கைகொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி நடை தொடரலாம். இரண்டு வெற்றிபாகிஸ்தானை பொறுத்த வரையில் இதுவரை பங்கேற்ற 4 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. 2 போட்டியை 'டிரா' செய்தது. 8 புள்ளியுடன் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய விட்டது. ஹன்னன் சாஹித் (4 கோல்), அகமது நதீம் (3) தவிர மற்ற வீரர்கள் கோல் அடிக்க தடுமாறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ