உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பைனலில் இந்தியா-பாக்., மோதல் * ஜூனியர் ஆசிய ஹாக்கியில்...

பைனலில் இந்தியா-பாக்., மோதல் * ஜூனியர் ஆசிய ஹாக்கியில்...

மஸ்கட்: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பைனலுக்கு முன்னேறியது இந்தியா. இதில் இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ஜூனியர் (21 வயது) ஆசிய கோப்பை ஹாக்கி 10வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. முடிவில் 'ஏ' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (12 புள்ளி), ஜப்பான் (9), 'பி' பிரிவில் முதலிரண்டு இடத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் (12), மலேசியா (7) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. போட்டியின் 10 வது நிமிடத்தில் இந்தியாவின் அராய்ஜீத்திடம் இருந்து பந்தை பெற்ற தில்ராஜ் சிங், 'பீல்டு' கோல் அடித்தார். 45வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில், இந்திய வீரர் ரோகித் கோல் அடித்தார். தொடர்ந்து ஷர்தா நந்த் திவாரி (51) ஒரு கோல் அடித்தார். 57 வது நிமிடம் 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில், மலேசிய வீரர் அஜிமுதீன் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. பாக்., வெற்றிநேற்று நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாகித் (27, 48) 2 கோல், பஷ்ரத் (38), சபியன் (52) தலா ஒரு கோல் அடித்தனர். ஜப்பான் அணிக்கு டனகா (30), யமனகா (41) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர்.இன்று நடக்கும் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பான் அணி, மலேசியாவை எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை