மேலும் செய்திகள்
ஹேண்ட்பால்: இந்தியா அபாரம்
25-Nov-2026
‘ரவுண்ட்–அப்’
25-Nov-2026
ஏலத்தில் ஆர்யவிர் சேவக்
25-Nov-2026
எக்ஸ்டிராஸ்
25-Nov-2026
உலக செஸ்: குகேஷ் ‘டிரா’
25-Nov-2026
இந்திய ஜோடி கலக்கல்: சையது மோடி பாட்மின்டனில்
24-Nov-2026
தாஷ்கண்ட்: ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் 'வால்ட்' பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்.உஸ்பெகிஸ்தானில், ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 'வால்ட்' பிரிவு பைனலில் இந்தியாவின் தீபா கர்மாகர், 13.566 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இதற்கு முன் ஆஷிஸ் குமார் (2015, 'புளோர்'), பிரனதி நாயக் (2019, 2022, 'வால்ட்') வெண்கலம் வென்றிருந்தனர். தவிர இது, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் தீபா கர்மாகர் கைப்பற்றிய 2வது பதக்கம். 2015ல் வெண்கலம் ('வால்ட்') வென்றிருந்தார்.தென் கொரியாவின் கிம் சன் ஹியாங் (13.466 புள்ளி), ஜியோ கியோங் பயல் (12.966) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.இருப்பினும் தீபா கர்மாகர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. 'ஆல்-ரவுண்ட்' பிரிவில் (46.166 புள்ளி) இவர், 16வது இடம் பிடித்து ஏமாற்றினார். மூன்றாவது இடம் பிடித்த பிலிப்பைன்சின் எம்மா மாலாபுயோ (50.398 புள்ளி) பாரிஸ் ஒலிம்பிக் வாய்ப்பை தட்டிச் சென்றார்.
25-Nov-2026
25-Nov-2026
25-Nov-2026
25-Nov-2026
25-Nov-2026
24-Nov-2026