பங்கஜ் அத்வானி சாம்பியன் * உலக பில்லியர்ட்சில் அபாரம்
தோஹா: உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பை வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி.கத்தாரில் ஆண்களுக்கான உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் பங்கஜ் அத்வானி, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நேற்று சக இந்திய வீரர் சவுரவ் கோத்தாரியை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.தொடர்ந்து நடந்த பைனலில் இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலை சந்தித்தார்.முதல் மூன்று 'பிரேமை' பங்கஜ் அத்வானி (150-94, 151-0, 150-84) வசப்படுத்தினார். அடுத்த இரு பிரேமை ராபர்ட் (151-74, 154-6) கைப்பற்றினார். 6 பிரேமில் அசத்திய பங்கஜ் அத்வானி, 152-46 என வசப்படுத்தினார்.முடிவில் பங்கஜ் அத்வானி 4-2 என வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.28 வது கோப்பைஇந்தியாவின் புனேயை சேர்ந்தவர் பங்கஜ் அத்வானி 39. இவர், பில்லியர்ட்சில் 18, உலக அணிக்கான பில்லியர்ட்சில் 1, பல்வேறு பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் தொடரில் 9 என மொத்தம் 28 கோப்பை வென்று அசத்தினார்.