மேலும் செய்திகள்
செஸ்: இந்தியா அபாரம்
25-Sep-2026
சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட்டில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் திவ்யா தேர்வு செய்யப்பட்டார். உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடந்தது. ஓபன் பிரிவில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோர் இடம் பெற்றனர். மொத்தம் 405.5 புள்ளியுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்திய அணியில் ஹம்பி, வந்திகா, திவ்யா, சவிதா ஸ்ரீ பங்கேற்றனர். 424 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் வென்றது.இந்தியாவுக்கு கோப்பைஇருப்பினும், இந்திய ஆண்கள் (ஓபன்), பெண்கள் அணிகள் இணைந்து 829.5 புள்ளி எடுத்து, முதலிடம் பிடித்தது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய அணி 'நோனா கேப்ரிந்தாஷ்விலி' கோப்பை (2022, 2024, 2026) தட்டிச் சென்றது.திவ்யா முதலிடம்செஸ் ஒலிம்பியாட்டில் முதன் முறையாக வழங்கப்பட்ட வீராங்கனை விருது, இந்தியாவில் திவ்யாவுக்கு கிடைத்தது. சிறந்த வீரராக உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ் தேர்வானார்.
25-Sep-2026