செஸ்: திவ்யா வெற்றி
சிம்கென்ட்: கஜகஸ்தானில் பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் திவ்யா, ஹம்பி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். ஐந்தாவது சுற்றில் திவ்யா தேஷ்முக், மல்கோலியாவின் பக்தியக்ஜினை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, போட்டியின் 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் கோனேரு ஹம்பி, உள்ளூர் வீராங்கனை பிபிசாராவை எதிர்கொண்டார். இதில் ஹம்பி, 34வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். ஐந்து சுற்று முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா (4.0), கஜகஸ்தானின் பிபிசாரா (3.5), இந்தியாவின் ஹம்பி (3.0) முதல் மூன்று இடத்தில் உள்ளனர். திவ்யா (2.5) 6வதாக உள்ளார்.