உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக செஸ்: ஹம்பி வெற்றி

உலக செஸ்: ஹம்பி வெற்றி

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் காலிறுதியில் முதல் போட்டியில் இந்தியாவின் ஹம்பி வெற்றி பெற்றார்.ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா வெற்றி பெற்றனர். இதையடுத்து முதன் முறையாக இந்தியாவின் நான்கு வீராங்கனைகள், உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறி, வரலாறு படைத்தனர்.நேற்று காலிறுதி சுற்று துவங்கின. இதில் இரு போட்டி நடக்கும். முதல் போட்டியில் 'சீனியர்' வீராங்கனை, உலகின் 'நம்பர்-5', ஹம்பி, சீனாவின் யூஜின் சாங் ('நம்பர்-36') மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார்.வேறு வழியில்லாத நிலையில், 53 வது நகர்த்தலில் யூஜின் தோல்வியை ஏற்றுக் கொண்டார். முதல் வெற்றி பெற்ற ஹம்பி 1.0-0 என முன்னிலை பெற்றார். இன்று இரண்டாவது போட்டியை குறைந்தபட்சம் 'டிரா' செய்தால், அரையிறுதிக்கு முன்னேறலாம்.திவ்யா 'டிரா'மற்றொரு காலிறுதியில் திவ்யா (நம்பர்-18'), ஹரிகா ('நம்பர்-12') மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, துவக்கத்தில் முந்தினார். பின் 31வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் உள்ளனர். இன்றைய போட்டியில் வெல்லும் வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.மற்றொரு காலிறுதியில் வைஷாலி ('நம்பர்-15'), சீனாவின் டான் ஜோங்யியை ('நம்பர்-8') சந்தித்தார். இப்போட்டி 72 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி