மேலும் செய்திகள்
அர்ஜுன் 'டிரா' * செஸ் உலக கோப்பை காலிறுதியில்...
17-Nov-2025
கோவா: உலக கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் தோல்வியடைந்தார். கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர். இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி மட்டும் காலிறுதியில் பங்கேற்கிறார். இதில் அர்ஜுன், சீனாவின் வெய் இ மோதினர். இவர்கள் மோதிய இரண்டு போட்டியும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமனில் இருந்தது.நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் அர்ஜுன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இதில் அடுத்தடுத்து பல தவறான நகர்த்தல்களால் பின்தங்கினார். 79 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். முடிவில் 1.5-2.5 என்ற கணக்கில் வீழ்ந்து வெளியேறினார் அர்ஜுன்.இத்தொடரில் 'டாப்-3' இடம் பிடித்தால், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் தகுதி போட்டியான 'கேண்டிடேட்ஸ்' தொடருக்கு தகுதி பெறலாம். ஆனால் சொந்தமண்ணில் களமிறங்கிய 24 இந்திய வீரர்களில், ஒருவர் கூட, உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறாதது ஏமாற்றமாக அமைந்தது.
17-Nov-2025