உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நீரஜ் சோப்ரா தந்த தன்னம்பிக்கை: தஜிந்தர் உற்சாகம்

நீரஜ் சோப்ரா தந்த தன்னம்பிக்கை: தஜிந்தர் உற்சாகம்

பெங்களூரு: ''ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வென்ற தங்கம், இந்திய விளையாட்டு நட்சத்திரங்களிடம் தன்னம்பிக்கையை விதைத்தது,'' என தஜிந்தர் தெரிவித்தார்.டோக்கியோ ஒலிம்பிக் (2021) ஈட்டி எறிதலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதற்கு பின் தடகளத்தில் இந்தியாவும் சாதிக்க முடியும் என்ற நிலை உருவானது. வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் (ஜூலை 26-ஆக.11, 2024) நமது நட்சத்திரங்கள் அதிக பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.இது குறித்து ஆசிய விளையாட்டில் இரண்டு தங்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் கூறுகையில்,''ஒலிம்பிக்கில் பங்கேற்பதே முக்கியம் என்பர். டோக்கியோவில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற பின் இந்திய நட்சத்திரங்களின் மனநிலை மாறியது. ஒலிம்பிக்கில் பங்கேற்பது மட்டுமல்ல, பதக்கமும் வெல்ல வேண்டும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது. உலகின் 'டாப்' தடகள வீரர்களுக்கு எந்தவிதத்திலும் நாம் குறைந்தவர்கள் அல்ல என்ற மனஉறுதி ஏற்பட்டது. இதன் காரணமாக 2023ல் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் காணப்பட்டது. நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, மனு என மூன்று பேர் பைனலுக்கு தகுதி பெற்றனர். இதில் நீரஜ் தங்கம் வென்றார். அடுத்து, பாரிஸ் ஒலிம்பிக்கிலும் சாதிக்க காத்திருக்கிறார்,'' என்றார்.இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா கூறுகையில்,''பல ஆண்டுகளுக்கு முன்பே ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் போட்டியை சேர்த்திருக்க வேண்டும். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. இளம் நட்சத்திரங்களை சமாளிக்க உடல், மனதளவில் தயாராகி வருகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி