உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: பிரதிதீ, சாத்வீக் அபாரம்

செஸ்: பிரதிதீ, சாத்வீக் அபாரம்

பதுமி: வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான செஸ் உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம் கிடைத்தது.ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் முதன் முறையாக நடந்தது. 8, 10, 12 வயது பிரிவில் ஓபன், சிறுமிகள் என 6 பதக்கங்களுக்கான போட்டி நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் 48 பேர் பங்கேற்றனர். தலா இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தன.12 வயது சிறுமிகள் பிரிவுகள் பிரிவில் இந்தியாவின் பிரதிதீ போர்டோலொய், 'பி' பிரிவில் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். இதில் சீனாவின் தியான்ஹாவோவிடம் 2.5-3.5 என தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.8 வயது ஓபன் பிரிவில் இந்திய வீரர் சாத்விக், 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்று, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் 1.5-0.5 என அஜர்பெய்ஜானின் ஆசாத்தை வென்று வெண்கலம் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ