உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹர்விந்தர், ராகேஷ் ஏமாற்றம்: ஆசிய பாரா வில்வித்தையில்

ஹர்விந்தர், ராகேஷ் ஏமாற்றம்: ஆசிய பாரா வில்வித்தையில்

பாங்காக்: ஆசிய 'பாரா' வில்வித்தையில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், ராகேஷ் குமார் பைனல் வாய்ப்பை இழந்தனர்.தாய்லாந்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' ஆசிய கோப்பை வில்வித்தை உலக ரேங்கிங் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், தாய்லாந்தின் நெட்சிரி மோதினர். இதில் ஏமாற்றிய ஹர்விந்தர் 4-6 (27-26, 27-26, 21-26, 25-29, 25-28) என்ற கணக்கில் தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஹர்விந்தர், மலேசியாவின் நுார்பைசல் ஹம்சாவை சந்திக்கிறார்.ஆண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஷியாம் சுந்தர் சுவாமி மோதினர். இதில் ராகேஷ் 145-146 (28-29, 29-30, 28-30, 30-28, 30-29) என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ராகேஷ், மலேசியாவின் விரோ ஜுலினை எதிர்கொள்கிறார். பைனலில் ஷியாம், இந்தோனேஷியாவின் கென் ஸ்வாகுமிலாங்கை சந்திக்கிறார்.மற்ற போட்டிகளில் இந்தியாவின் பூஜா ('ரீகர்வ்' ஓபன்), சரிதா ('காம்பவுண்டு' ஓபன்) பைனலுக்குள் நுழைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை