உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய ஹாக்கி: இந்தியா வெற்றி * வீழ்ந்தது மலேசியா

ஆசிய ஹாக்கி: இந்தியா வெற்றி * வீழ்ந்தது மலேசியா

ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-0 என மலேசியாவை வீழ்த்தியது.ஆசிய பெண்கள் ஹாக்கி அணிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 7வது சீசன் நேற்று பீஹாரில் துவங்கியது. இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து என 6 அணிகள் மோதுகின்றன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. போட்டியின் 8வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சங்கீதா குமாரி, முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். 43வது நிமிடத்தில் பிரீத்தி, 44 வது நிமிடத்தில் உதித்தா தலா ஒரு கோல் அடித்தனர். மீண்டும் அசத்திய சங்கீதா குமாரி (55) மற்றொரு கோல் அடித்து கைகொடுத்தார்.முடிவில் இந்திய பெண்கள் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று தென் கொரியாவை சந்திக்க உள்ளது.சீனா மிரட்டல்பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனா, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த சீனா, 15-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பான், தென் கொரிய அணிகள் மோதிய மற்றொரு போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை