உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியா-நியூசி., பலப்பரீட்சை * வெளியானது ஒலிம்பிக் ஹாக்கி அட்டவணை

இந்தியா-நியூசி., பலப்பரீட்சை * வெளியானது ஒலிம்பிக் ஹாக்கி அட்டவணை

லாசேன்: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்ற ஹாக்கி போட்டி முதன் முறையாக 1908ல் லண்டன் ஒலிம்பிக்கில் அறிமுகம் ஆனது.தற்போது 25வது முறையாக பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ளது. இம்முறை 12 ஆண்கள், 12 பெண்கள் அணிகள் களமிறங்குகின்றன. நேற்று போட்டி அட்டவணை வெளியானது. இந்திய ஆண்கள் அணி இம்முறை 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அயர்லாந்து அணிகள் உள்ளன. 'ஏ' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், தென் ஆப்ரிக்க அணிகள் உள்ளன. ஜூலை 27-ஆக. 2 வரை லீக் போட்டி நடக்கவுள்ளன. ஆக. 4ல் காலிறுதி, ஆக. 6ல் அரையிறுதி, 8ல் பைனல் நடக்கும். இந்திய அணி 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் அசத்தலாக செயல்பட்டது. 41 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றது. இம்முறை மீண்டும் சாதிக்க திட்டமிட்டுள்ளது. தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை (ஜூலை 27) சந்திக்க உள்ளது. அடுத்து அர்ஜென்டினா (ஜூலை 29), அயர்லாந்து (ஜூலை 30), பெல்ஜியம் (ஆக. 1) கடைசியாக ஆஸ்திரேலியாவுடன் (ஆக. 2) மோத உள்ளது. பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி இம்முறை தகுதி பெறவில்லை. அட்டவணைஇந்திய அணி மோதும் லீக் சுற்று அட்டவணை:தேதி எதிரணி நேரம்ஜூலை 27 நியூசிலாந்து இரவு 9:00 மணிஜூலை 29 அர்ஜென்டினா மாலை 4:15 மணிஜூலை 30 அயர்லாந்து மாலை 4:45 மணிஆக. 1 பெல்ஜியம் நள்ளிரவு 1:30 மணிஆக. 2 ஆஸ்திரேலியா மாலை 4:45 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை