உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மணிகண்டன் தங்கம் * உலக பாரா கிளைம்பிங் போட்டியில்...

மணிகண்டன் தங்கம் * உலக பாரா கிளைம்பிங் போட்டியில்...

லாவல்: பிரான்சின் லாவல் நகரில் பாரா 'கிளைம்பிங்' உலக கோப்பை தொடர் நடந்தது. மொத்தம் 18 நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் மணிகண்டன் குமார் பங்கேற்றார். சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருந்தார். இம்முறை 'ஆர்.பி.2' பிரிவில் களமிறங்கினார் மணிகண்டன்.44+ புள்ளி எடுத்து அசத்திய மணிகண்டன், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உலக கோப்பை தொடரில் மணிகண்டன் வென்ற முதல் தங்கம் இது. ஜெர்மனியின் பிலிப் குரோஜக் (44), ஆஸ்திரியாவின் டெனியல் வியனெர் (40) அடுத்த இரு இடம் பிடித்தனர். ஐந்து தங்கம், 2 வெண்கலம் வென்ற பிரான்ஸ் அணி, ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.பெங்களூருவை சேர்ந்த மணிகண்டன், 5 வயதில், வலது காலில் ஏற்பட்ட 'போலியோ' பாதிப்பில் இருந்து மீண்டார். 16 வயதில் வேகமாக சுவற்றில் ஏறும், சாகச போட்டிகளில் ('கிளைம்பிங்') பங்கேற்றார். உலக சாம்பியன்ஷிப்பில் ஆறு பதக்கம் வென்ற இவர், முதன் முறையாக உலக கோப்பை தொடரில் சாதித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை