உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஜூடோ: கபில் பர்மர் தங்கம்

ஜூடோ: கபில் பர்மர் தங்கம்

டிபிலிசி: கிராண்ட் பிரிக்ஸ் ஜூடோ போட்டியில் இந்தியாவின் கபில் பர்மர் தங்கம் வென்றார்.ஜார்ஜியாவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிராண்ட் பிரிக்ஸ் ஜூடோ தொடர் நடந்தது. ஆண்களுக்கான 60 கிலோ 'ஜே1' பிரிவு பைனலில் இந்தியாவின் கபில் பர்மர், பிரேசிலின் எலியேல்டன் டி ஒலிவேரா மோதினர். அபாரமாக ஆடிய கபில் பர்மர், 20 வினாடியில் வெற்றியை உறுதி செய்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் உலக, பாராலிம்பிக் தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.பெண்களுக்கான 48 கிலோ 'ஜே2' பிரிவில் இந்தியாவின் கோகிலா 5வது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை