உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சென்னை ஓபன் டென்னிசில் மாக்டா லினெட் ‘சாம்பியன்’

சென்னை ஓபன் டென்னிசில் மாக்டா லினெட் ‘சாம்பியன்’

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் போலந்தின் மாக்டா லினெட் சாம்பியன் ஆனார். சென்னையில், பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் 3வது சீசன் நடந்தது. நேற்று முன் தினம் (நவ. 8) நடக்க இருந்த ஒற்றையர் பிரிவு பைனல் கனமழை காரணமாக நேற்று நடந்தது. இதில், இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், போலந்தின் மாக்டா லினெட் மோதினர். முதல் செட்டை டிஜென் 7–5 என போராடி கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட லினெட், 2வது செட்டை 6–1 என மிகச்சுலபமாக வென்றார். வெற்றி யாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய போலந்து வீராங்கனை 6–4 என வென்றார். இரண்டு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் போலந்தின் மாக்டா லினெட் 5–7, 6–1, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத் தொடரில் முதல் முறையாக கோப்பை வென்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன் (2022), இங்கு பைனலில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்திருந்தார் லினெட். பைனலில் ஏமாற்றிய இந்தோனேஷியாவின் டிஜென், ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை பறிகொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை