மேலும் செய்திகள்
உலக கூடைப்பந்து: அமெரிக்கா ஆதிக்கம்
15 hour(s) ago
டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா சாம்பியன்
12-Sep-2026
டுப்ளான்டிஸ், யரோஸ்லவா அசத்தல்
12-Sep-2026
பைனலில் இந்தியா: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில்
11-Sep-2026
புதுடில்லி: 'பாரா' உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மணிஷ் நார்வல் 2 வெள்ளி வென்றார்.டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. ஆண்கள் தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' (எஸ்.எச். 1) பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மணிஷ் நார்வல் 574 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான ருத்ரன்ஷ் (564), சஞ்ஜீவ் கிரி (559), சிங்ராஜ் (546) பைனல் வாய்ப்பை இழந்தனர்.அடுத்து நடந்த பைனலில் மணிஷ் நார்வல் 236.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். தங்கம், வெண்கலப் பதக்கம் முறையே சீனா, தென் கொரியாவுக்கு கிடைத்தன.ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' (எஸ்.எச். 1) பிரிவில் மணிஷ் நார்வல், ருத்ரன்ஷ், சஞ்ஜீவ் கிரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.
15 hour(s) ago
12-Sep-2026
12-Sep-2026
11-Sep-2026