தேசிய ஹாக்கி: ஒடிசா சாம்பியன்
சென்னை: தேசிய ஹாக்கி பைனலில் ஒடிசா அணி 5-1 என, ஹரியானாவை வீழ்த்தி கோப்பை வென்றது.சென்னையில், சீனியர் ஆண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடந்தது. பைனலில் ஹரியானா, ஒடிசா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஒடிசா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. ஒடிசா சார்பில் ஷிலானந்த் 3 (48, 57, 60வது நிமிடம்), ரஜத் ஆகாஷ் டிர்கி (11வது), பிரதாப் லக்ரா (39வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஹரியானா அணிக்கு ஜோகிந்தர் சிங் (55வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.மூன்றாவது இடத்துக்கான போட்டியில் உத்தர பிரதேசம், மணிப்பூர் அணிகள் மோதின. இதில் உத்தர பிரதேச அணி 2-1 என வெற்றி பெற்று, 3வது இடத்தை கைப்பற்றியது.சாம்பியன் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு, துணை முதல்வர் உதயநிதி, சாம்பியன் கோப்பையை வழங்கினார்.