உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழகத்தின் நர்மதா சாதனை * தேசிய துப்பாக்கிசுடுதலில் தங்கம்

தமிழகத்தின் நர்மதா சாதனை * தேசிய துப்பாக்கிசுடுதலில் தங்கம்

டேராடூன்: தேசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதலில் புதிய சாதனை படைத்து தங்கம் கைப்பற்றினார் தமிழகத்தின் நர்மதா. இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். துப்பாக்கிசுடுதல் போட்டியில் 29 அணிகளில் இருந்து 364 பேர் களமிறங்கியுள்ளனர். இதில் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச்சுற்றில் ஹரியானாவின் ரமிதா (634.9), மஹாராஷ்டிராவின் ஆர்யா போர்ஷே (634.5), தமிழகத்தின் நர்மதா (634.4) முதல் மூன்று இடம் பெற்றிருந்தனர். நேற்று பைனல் நடந்தது. இம்முறை சிறப்பாக செயல்பட்ட 23 வயது நர்மதா 254.4 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2019ல் டில்லியில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் அபுர்வி சண்டேலா 252.9 புள்ளி எடுத்திருந்தார். தவிர, 0.1 புள்ளி வித்தியாசத்தில் நர்மதா, உலக சாதனையை (ஹுவாங் யூட்டிங் 254.5, சீனா) சமன் செய்யும் வாய்ப்பை தவறவிட்டார். ரமிதா வெண்கலம்ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற, ஒலிம்பிக்கில் பங்கேற்ற ரமிதா, 230.4 புள்ளி மட்டும் எடுத்து, வெண்கலப் பதக்கம் வென்றார். ஆர்யாவுக்கு (252.5) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக்கில் பங்கேற்ற குஜராத்தின் இளவேனில் (188.0) ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அனிஷ் அபாரம்ஆண்களுக்கான 25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் ஹரியானாவின் அனிஷ் பன்வாலா 31 புள்ளி எடுத்து தங்கம் வசப்படுத்தினார். சர்வீசஸ் வீரர் குர்பிரீத் சிங் (28) வெள்ளி வென்றார். தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்த பஞ்சாப்பின் விஜய்வீர் சித்துவுக்கு (26) வெண்கலம் தான் கிடைத்தது. தனுஷ் கலக்கல்ஆண்களுக்கான 200 மீ., 'பிரஸ்ட் ஸ்டிரோக்' நீச்சல் பைனல் நடந்தது. இதில் அசத்திய தமிழக வீரர் தனுஷ், தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான பிரிவில் கேரளாவின் ஹர்ஷித்தா தங்கம் வசப்படுத்தினார். * பெண்களுக்கான களரிபயட்டு போட்டியில் தமிழக ஜோடி வெண்கலம் கைப்பற்றியது.* கலப்பு 'டிரையாத்லான்' போட்டியில் தமிழக அணி, வெண்கலம் வென்றது. * பெண்களுக்கான கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி 6-0 என்ற கோல் கணக்கில் சிக்கிமை வீழ்த்தியது.* பெண்களுக்கான கூடைப்பந்து 'பி' பிரிவு போட்டியில் தமிழக அணி 86-52 என டில்லியை வென்றது.* தமிழக ஆண்கள் அணி 123-54 என உத்தரகாண்ட்டை வீழ்த்தி, தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை