உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நீரஜ் சோப்ராவுக்கு ஆப்பரேஷன்: தாயகம் திரும்புவதில் தாமதம்

நீரஜ் சோப்ராவுக்கு ஆப்பரேஷன்: தாயகம் திரும்புவதில் தாமதம்

புதுடில்லி: இந்தியாவின் நீரஜ் சோப்ரா 'ஆப்பரேஷன்' செய்ய இருப்பதால், இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பிரான்சில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் (2020ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற முதல் இந்தியரானார். இந்நிலையில் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், ஜெர்மனி சென்றுள்ளார்.சமீபகாலமாக இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்படும் நீரஜ் சோப்ரா, மருத்துவரின் ஆலோசனைப்படி 'ஆப்பரேஷன்' செய்ய ஜெர்மனி சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர் இந்தியாவுக்கு திரும்புவதில் தாமதம் ஆகலாம்.இதுகுறித்து நீரஜ் சோப்ராவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ''ஜெர்மனி சென்றுள்ள நீரஜ் சோப்ரா, இந்தியாவுக்கு திரும்ப ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம். அங்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்வார். உடற்தகுதியை பொறுத்து டயமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்பார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ