உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வென்றார் பிரஞ்சலி: டெப்லிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் பிரஞ்சலி: டெப்லிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில்

டோக்கியோ: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை பிரஞ்சலி (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் பிரஞ்சலி பிரஷாந்த் துமால் (573.14 புள்ளி), அனுயா பிரசாத் (569.15) முதலிரண்டு இடம் பிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் அசத்திய பிரஞ்சலி, 34 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். இது, இம்முறை பிரஞ்சலி கைப்பற்றிய 3வது பதக்கம். கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் சகவீரர் அபினவ் தேஷ்வாலுடன் இணைந்து தங்கம் வென்ற இவர், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் வெள்ளி கைப்பற்றினார்.10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற அனுயா, 23 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். இம்முறை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்துள்ளன.சுமித் 'தங்கம்': ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' மல்யுத்தம் 97 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுமித் தஹியா, துருக்கியின் ஓமர் சானரை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். 'பிரீஸ்டைல்' 86 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அமித் கிருஷ்ணா, உக்ரைனின் அனாடோலி செர்வோனென்கோவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.பெண்களுக்கான கராத்தே போட்டியில் (50 கிலோ) லோமா ஸ்வைன் வெண்கலம் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை