உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

ஜெய்ப்பூர்: இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், இரண்டாவது கட்ட போட்டிகள் நடக்கின்றன.நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் 10-22 என பின்தங்கியது தமிழ் தலைவாஸ். இரண்டாவது பாதியிலும் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ், 29-43 என தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் புனே, ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் அசத்திய ஹரியானா அணி 19-11 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் புனே அணி அடுத்தடுத்து புள்ளி எடுத்து பதிலடி தந்தது. போட்டி முடிய 2 நிமிடம் இருந்த போது, 28-30 என நெருங்கியது. இருப்பினும் ஹரியானா அணி 34-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஹரியானா வீரர் வினய், அதிகபட்சம் 13 புள்ளி எடுத்து உதவினார். புனே சார்பில் பங்கஜ் (14) ஆறுதல் தந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை