உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

போராடி வென்றார் ஜோகோவிச் பாரிஸ்: பிரான்சில், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலன்டின் வசேராட் மோதினர். இரண்டு மணி நேரம், 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 6–7, 7–5, 6–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6–3, 6–4 என, பிரிட்டனின் கேமரூன் நோரியை வென்றார். மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 72வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3–2 என இத்தாலியின் ரோமா அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் அணி (பிரான்ஸ்) 6–0 என, வில்லாரியல் அணியை (ஸ்பெயின்) அணியை வென்றது. பார்சிலோனா அணி (ஸ்பெயின்) 3–0 என ஆஸ்டன் வில்லா அணியை (இங்கிலாந்து) வீழ்த்தியது. பேயர்ன் முனிக் அணி (ஜெர்மனி) 1–0 என, அத்லெடிகோ மாட்ரிட் அணியை (ஸ்பெயின்) தோற்கடித்தது. டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் எப்போது இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், வரும் நவ. 8–15ல் உலகின் ‘டாப்–8’ வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது. இதன் ஒற்றையர் பிரிவுக்கான ‘குரூப்–1’ல் ‘நடப்பு சாம்பியன்’ கஜஸ்தானின் எலினா ரிபாகினா, கோகோ காப் (அமெரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), லிண்டா நோஸ்கோவா (செக்குடியரசு) உள்ளனர். ‘குரூப்–2’ல் பெலாரசின் அரினா சபலென்கா, மிர்ரா ஆன்ட்ரீவா (ரஷ்யா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா முசோவா (செக்குடியரசு) இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ