உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்னுாக்கர் கிளாசிக்: அரையிறுதியில் அத்வானி

ஸ்னுாக்கர் கிளாசிக்: அரையிறுதியில் அத்வானி

மும்பை: ஸ்னுாக்கர் கிளாசிக் தொடரின் அரையிறுதிக்கு பங்கஜ் அத்வானி, இஷ்பிரீத் சிங் முன்னேறினர்.மும்பையில், சி.சி.ஐ., ஸ்னுாக்கர் கிளாசிக் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ்.பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, ரயில்வேஸ் அணியின் மல்கீத் சிங் மோதினர். அபாரமாக ஆடிய அத்வானி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் பி.எஸ்.பி.பி., அணியின் இஷ்பிரீத் சிங் சதா, ரயில்வேஸ் அணியின் திலிப் குமார் மோதினர். இதில் அசத்திய இஷ்பிரீத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். குஜராத்தின் கீத் சேதி (1988), மும்பையின் ஆதித்ய மேத்தாவுக்கு (2013) பின், அதிகபட்சமாக 147 'பிரேக்' எடுத்த 3வது இந்திய வீரரானார்.மற்றொரு காலிறுதியில் ரயில்வேஸ் அணியின் பைசல் கான் 5-0 என பி.எஸ்.பி.பி., அணியின் பிரிஜேஷ் தமானியை வென்றார். கமல் சாவ்லா 5-1 என ஹசன் பதாமியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை