உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவிடம் வீழ்ந்தது தென் கொரியா: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில்

இந்தியாவிடம் வீழ்ந்தது தென் கொரியா: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில்

இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 1-0 என, தென் கொரியாவை வீழ்த்தியது.மலேசியாவின் இபோ நகரில், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் நடக்கிறது. இந்தியா, பெல்ஜியம், நியூசிலாந்து, மலேசியா, தென் கொரியா, கனடா என 6 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், இத்தொடரில் பங்கேற்கவில்லை.லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் இந்தியாவின் முகமது ரஹீல் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய தென் கொரிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, இன்று பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.மற்றொரு போட்டியில் நியூசிலாந்து, மலேசியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என 'டிரா' ஆனது. பெல்ஜியம், கனடா அணிகள் மோதிய போட்டி 1-1 என 'டிரா' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை