உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: பைனலில் ராதிகா

ஸ்குவாஷ்: பைனலில் ராதிகா

சிட்னி: நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ் பைனலுக்கு இந்திய வீராங்கனை ராதிகா முன்னேறினார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராதிகா சீலன், நியூசிலாந்தின் எம்மா மெர்சன் மோதினர். மொத்தம் 32 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ராதிகா 3-0 (11-9, 11-7, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். தமிழகத்தை சேர்ந்த ராதிகா 24, பைனலில் கனடாவின் இமான் ஷாஹீனை சந்திக்கிறார். இது, ராதிகா விளையாடும் 4வது பி.எஸ்.ஏ., பைனல்.அமெரிக்காவில் நடக்கும் செயின்ட் ஜேம்ஸ் எக்ஸ்பிரஸ்சன் ஓபன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் வீர் சோட்ரானி 3-2 (7-11, 12-10, 11-8, 5-11, 11-6) என்ற கணக்கில் எகிப்தின் முகமது எல்ஷெர்பினியை வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை