உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: பைனலில் வேலவன்

ஸ்குவாஷ்: பைனலில் வேலவன்

பாரிஸ்: 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆண்களுக்கான 'பேட்ச்' ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் உலகின் 'நம்பர்-58' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 163வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் ஆன்டிஸ் லிங் மோதினர். மொத்தம் 22 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய 'நடப்பு தேசிய சாம்பியன்' வேலவன் 3-0 (11-2, 11-1, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் வேலவன், 158வது இடத்தில் உள்ள பிரான்சின் மெல்வில் சியானிமானிகோ மோதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !