மேலும் செய்திகள்
காலிறுதியில் இந்திய ஜோடி
10-Jul-2025
கெய்ரோ: எகிப்தில் உலக ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி 'பி' பிரிவில் இடம் பெற்றது. முதல் போட்டியில் 3-0 என அயர்லாந்தை வென்ற இந்தியா, அடுத்து ஹாங்காங்கிடம் 1-2 என தோற்றது.நேற்று மூன்றாவது, கடைசி போட்டியில் பிரேசிலை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், 11-4, 11-3, 11-3 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். அடுத்து உன்னதி 11-3, 11-2, 11-3 என எளிதாக வென்றார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் அனிகா, 11-1, 11-1, 11-5 என அசத்தினார். முடிவில் இந்தியா 3-0 என வென்று, பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று, வலிமையான எகிப்து அணியை சந்திக்க உள்ளது.'டி' பிரிவில் இடம் பிடித்த இந்திய ஆண்கள் அணி, முதல் இரு போட்டியில் தென் ஆப்ரிக்கா (3-0), ஜெர்மனியை (3-0) சாய்த்தது. நேற்று மூன்றாவது போட்டியில் 2-1 என ஜப்பானை வீழ்த்தி, பட்டியலில் முதலிடம் பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று தென் கொரியாவை எதிர்கொள்கிறது.
10-Jul-2025