உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டேபிள் டென்னிஸ்: சரத் கமல் ஏமாற்றம்

டேபிள் டென்னிஸ்: சரத் கமல் ஏமாற்றம்

ஜெட்டா: 'சவுதி ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் சரத் கமல் தோல்வியடைந்தார்.சவுதி அரேபியாவில் சர்வதேச 'சவுதி ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், நைஜீரியாவின் குவாட்ரி அருணா மோதினர். முதலிரண்டு செட்களை 11-8, 13-11 எனக் கைப்பற்றிய சரத் கமல், அடுத்த இரு செட்களை 8-11, 5-11 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 11-13 என போராடி கோட்டைவிட்டார். முடிவில் சரத் கமல் 2-3 (11-8, 13-11, 8-11, 5-11, 11-13) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி கோர்படே ஜோடி 3-2 (11-7, 9-11, 11-4, 4-11, 11-5) என சிலியின் நிக்கோலஸ் பர்கோஸ், பவுலினா வேகா ஜோடியை வீழ்த்தியது.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 1-3 (7-11, 11-13, 11-9, 12-14) என போர்ச்சுகலின் ஜீனி ஷாவோவிடம் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ