டேபிள் டென்னிஸ் * திவ்யான்ஷி வெண்கலம்
கிளஜ் நபோகா: உலக யூத் டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் திவ்யான்ஷிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.ருமேனியாவின் கிளஜ் நபோகா நகரில், உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷி 14, அரையிறுதிக்கு முன்னேறினார்.இதில் திவ்யான்ஷி, ஜு குய்ஹுய்யை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை திவ்யான்ஷி 12-10 என போராடி கைப்பற்றினார். அடுத்த செட்டை 10-12 என இழந்தார். பின் நடந்த மூன்று செட்டையும் 6-11, 4-11, 8-11 என நழுவவிட்டார். முடிவில் திவ்யான்ஷி 1-4 (12-10, 10-12, 6-11, 4-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் பெற்றார். பயாஸ் ஜெயின் (2021), சுஹானா சைனிக்குப் பின் (2021) உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் திவ்யான்ஷி.