உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / விஜய்வீர் சித்து தங்கம் உலக துப்பாக்கி சுடுதலில்...

விஜய்வீர் சித்து தங்கம் உலக துப்பாக்கி சுடுதலில்...

பியுனஸ் ஏர்ஸ்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் விஜய்வீர் சித்து தங்கம் வென்றார்.அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் விஜய்வீர் சித்து, 579.17 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். மற்ற இந்திய வீரர்களான குர்பிரீத் சிங் (575.21 புள்ளி), அனிஷ் (570.11) முறையே 10, 13வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தனர்.அடுத்து நடந்த பைனலில் அசத்திய விஜய்வீர் சித்து, 29 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, உலக கோப்பை அரங்கில் விஜய்வீர் சித்து கைப்பற்றிய முதல் தங்கப்பதக்கம்.கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல், ஆர்யா போர்ஸ் ஜோடி 9-17 என சீனாவின் ஜிபெய் வாங், புஹான் சோங் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா, நர்மதா நிதின் ராஜு ஜோடி 13-17 என அர்ஜென்டினாவின் பெர்ணான்டா ரூசோ, ஜூலியன் மார்சிலோ ஜோடியிடம் வீழ்ந்தது.இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 7 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ