உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / புதிய தலைவர் மீராபாய் சானு

புதிய தலைவர் மீராபாய் சானு

புதுடில்லி: இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு 30. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்திய பளுதுாக்குதல் கூட்டமைப்பு தடகள கமிஷன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மீராபாய் சானு கூறியது:சக பளுதுாக்குதல் வீரர், வீராங்கனைகளின் குறைகளை சரி செய்ய வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. இதை சீரியசாக எடுத்துக் கொண்டு முழுவேகத்துடன் பொறுப்பாக செயல்படுவேன். மற்ற விஷயங்களால் பாதிக்கப்படாமல், அனைவரும் தொடர்ந்து போட்டிகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி