உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சென்னை அணியில் என்ன மாற்றம்...

சென்னை அணியில் என்ன மாற்றம்...

சென்னை: சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ அக்சர் படேலை சென்னை அணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது. கிரிக்கெட் லீக் தொடரில் ஐந்து முறை (2010, 2011, 2018, 2021, 2023) கோப்பை வென்ற அணி சென்னை. கடந்த 3 சீசனிலும், ‘பிளே ஆப்’ செல்ல முடியாமல் தவிக்கிறது. வரும் சீசனுக்கு (2027) தயாராகும் வகையில், பல்வேறு மாற்றங்கள் நடக்கின்றன. இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் 47, புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பவுலிங் பயிற்சியாளராக மோஹித் சர்மா வந்துள்ளார். தற்போது வீரர்களை மாற்றிக் கொள்ளும் ‘டிரேடிங்’ நடக்கிறது. கடந்த முறை ஜடேஜா, சாம் கர்ரான் ராஜஸ்தான் செல்ல, அங்கிருந்து சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்தார். இம்முறை சென்னை அணியில் கலீல் அகமது, நாதன் எல்லீசிற்குப் பதில் ஐதராபாத் அணியிடம் இருந்து, லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்சை வாங்கியது. இதுபோல, பிரவிஸ், நுார் அகமதுவை விட்டுக் கொடுத்து விட்டு, டில்லி அணியின் அக்சர் படேல், அஷுதோஷை சென்னை கொண்டு வர பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளன. இந்திய அணி முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறுகையில்,‘‘ கலீல் அகமதுவை மாற்றியதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், ஜாக் எட்வர்ட்சை (ஆஸி.,) சென்னை அணி ஏன் வாங்கியது என்றே தெரியவில்லை. இவர், உள்ளூர் போட்டிகளில் சாதாரண பவுலர். பெரியளவு சொல்லிக்கொள்ளும் படி சாதனை எதுவும் இல்லை. லிவிங்ஸ்டன் சிறந்த வீரராக இருப்பார்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !