உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / புரோ கபடி லீக் எப்போது

புரோ கபடி லீக் எப்போது

புதுடில்லி: புரோ கபடி லீக் தொடர் வரும் அக். 18ல் ஐதராபாத்தில் துவங்குகிறது.புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியானது. லீக் போட்டிகள் மூன்று நகரங்களில் நடத்தப்படுகிறது. முதற்கட்ட போட்டிகள் ஐதராபாத்தில் வரும் அக். 18 முதல் நவ. 9 வரை நடக்கும். அடுத்த இரண்டு கட்டப் போட்டிகள் கிரேட்டர் நொய்டா (நவ. 10 - டிச. 1), புனேயில் (டிச. 3-24) நடக்கவுள்ளன.அக். 18 ல் நடக்கும் முதல் போட்டியில் பவான் ஷெராவத்தின் தெலுங்கு டைட்டன்ஸ் அணி, பர்தீப் நார்வலின் பெங்களூரு அணியை சந்திக்கிறது. அன்று நடக்கும் 2வது போட்டியில் மும்பை, டில்லி அணிகள் விளையாடுகின்றன. லீக், 'பிளே-ஆப்' சுற்றுக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.சமீபத்தில் மும்பையில் (ஆக. 15-16), 11வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் டில்லி அணி சார்பில் நவீன் குமார் அதிகபட்சமாக 1.015 கோடிக்கு ஒப்பந்தமானார். தவிர இந்த ஏலத்தில், அதிகபட்சமாக 8 பேர், தலா ரூ. ஒரு கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !