உலக விளையாட்டு செய்திகள்
காலிறுதியில் சுவீடன்லுாசெர்ன்: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து 'சி' பிரிவு லீக் போட்டியில் சுவீடன் அணி 3-0 என போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு லீக் போட்டியில் ஜெர்மனி அணி 2-1 என டென்மார்க்கை வென்றது.பிரேசில் பிரமாதம்ஒசிஜெக்: குரோஷியா, செர்பியாவில் நடக்கும் பெண்கள் (19 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி 3-0 என பெல்ஜியத்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் அமெரிக்க அணி 3-2 என ஜெர்மனியை வென்றது.பெல்ஜியம் அசத்தல்லா பால்மா: ஸ்பெயினில் நடக்கும் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 'யூரோ' கோப்பை கூடைப்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் பெல்ஜியம் அணி 66-44 (25-7, 16-10, 13-11, 12-16) என்ற கணக்கில் இஸ்ரேல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.அரையிறுதியில் இத்தாலிடிரானா: அல்பானியாவில் நடக்கும் பெண்கள் (16 வயது) ஐரோப்பிய வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இத்தாலி அணி 3-0 என ஸ்பெயினை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் வென்ற இத்தாலி அரையிறுதிக்கு முன்னேறியது. எக்ஸ்டிராஸ்* புரோ கபடி லீக் 12வது சீசன், வரும் ஆக. 29ல் துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.* இந்திய ஓபன் தடகள போட்டிகள் வரும் ஜூலை 12ல் புனேயில் நடக்கவுள்ளன. இதில் 350 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். மகாராஷ்டிரா சார்பில் அதிகபட்சமாக 95 பேர் களமிறங்குகின்றனர்.* தென் ஆப்ரிக்காவில் நடத்தப்படும் 'எஸ்ஏ20' லீக் 4வது சீசன் வரும் டிச. 26ல் துவங்குகிறது. முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கேப்டவுன், டர்பன் அணிகள் விளையாடுகின்றன. பைனல், அடுத்த ஆண்டு ஜன. 25ல் நடக்கவுள்ளது.